ஞாயிறு, 16 செப்டம்பர், 2012




சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள் :

1.ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்
2. பின் கொடிமரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும்(நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது)விழுந்து வணங்க வேண்டும் ,பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை.காமம் ,குரோதம் ,கோபம் போன்ற தீய குணங்களை அற்பணிக்க வேண்டும்

3.தூய மனதுடன் துவார வினாயகர் துவார முருகர் ஆகியோரை வணங்கி பின் உள்ளே சென்று சூரிய சந்திரர்களை வணங்கி அடுத்து நந்தீஷ்வரரை (வில்வம் வைத்து )வணங்க வேண்டும் .

4.சிவனுக்கு பிடித்த வில்வம்,மற்றும் பூக்கள் கொண்டு சென்று அடுத்து மூலவரான சிவபெருமானை பார்த்து நம " பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா " எனச்சொல்லி வணங்கி வணங்குதல் வேண்டும்

5. இறைவனை நினைத்து தேவாரம் திருவாசகம் பாடல் பாடுதல் ,பாடல் பாடுவதன் இறைவன் அருகில் செல்லலாம்


6.அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை ,துர்க்கை, நடராஜப்பெருமானை வணங்கி வரவும்

7. அடுத்து சிவாலயத்தின் அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கவும்

8.நிறைவாக சண்டிகேஸ்வரர் காலபைரவர் நவகிரகங்களை வணங்குதல் வேண்டும்

9.அதன் பின் கொடி மரத்தை அடைந்து 1,3,5,7,9 என முறைப்படுத்தி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் .பிரதக்ஷிணம் என்பது மெதுவாக நடத்தல் அடி அடியாக எனக்கொள்ளலாம் .அப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்லப்படுகின்றன.

10. பிரதட்க்ஷிணம் முடித்து 108 ,54,27 என்ற முறையில் ஜபம் செய்தால் மோட்சம் கிட்டும் 11.நிறைவாக நமஷ்காரம் செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான் (எழும்போது தூசிகள் தட்டக்கூடாது)


11. த்திரயங்க நமஷ்காரம் கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது இதற்கு அஞ்சலி வந்தனம் என்று பெயர் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும்

12. சிவப்பிரசாதம் வாங்கி இடக்கையில் போடாமல் அப்படியே இட்டுக்கொள்ள வேண்டும் . திருக்கோவிலில் எங்காவது வைத்து அசுத்தப்படுத்தக்கூடாது.அர்சகர் கொடுக்கும் திருநீரு இறைவனே அளித்ததாக எண்ணி வீட்டில் அனைவருக்கும் தரவும்.


இம்முறை பின்பற்றி இறைவன வணங்குங்கள் .

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அஷ்ட பைரவர் தரிசனம்

                                           அஷ்ட்ட  பைரவர்  தரிசனம் 

         ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றது.   இந்த தலம் சேலம் மாவட்டத்திற்கும் அருகில் உள்ள தலைவாசலில்  இருந்து  6kmலில்  தான் அமைத்துள்ளது ஆறகளூர் என்ற ஆன்மிக அற்புத சிறப்பு மிக்க ,வேறு எங்கும் இல்லாத வகையில் அஸ்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு.தமிழ்நாட்டில் சைவத்தில் தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் புத்துயிர்பெற்று  உள்ளது .இதில் மிகவும் சிறப்புடையது ஒரே கோவிலில் 8 பைரவரை வழிபடுவது 
    
      மேலும் சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது.
    மேலும் பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.
        
         இங்கு, மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில், விழா நடந்து வருகிறது. 
 காமநாதீஸ்வரர் கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. பாடல்பெற்ற திருத்தலமான இது, முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சோழ அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர் வானவராயன் என்பவர் இந்த ஊரை ஆண்டுள்ளார்.
 கோவிலுக்குள் சென்றதும் முதலில்  முழுமுதல் கடவுள் கணபதியை  வணங்கி பிறகு கொடிமரம் ,நந்தி தரிசனம் முடித்து எல்லாம் வல்ல எம்பெருமான் சுயம்பு மூர்த்தி அருள்மிகு காமநாதீஸ்வரரை வணங்கலாம் .மேலும் அய்யனின் சிறப்பு இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை "காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். "காயம்' என்றால் உடல், "நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள். 
                                                                1. ஸ்ரீ அசிதாங்க பைரவர்
முதல்  பைரவர் மூலவருக்கு இடது பக்கத்தில் எழுந்துள்ளார் 

  இனி அஷ்ட பைரவர்களை பார்ப்போம் 


  குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி
ஓம் ஞான தேவாய வித்மஹே   வித்யா ராஜாய தீமஹி  தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்,
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத் என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம் 
                                                        2,ஸ்ரீ ருரு பைரவர் 
         இரண்டாவது  பைரவர் வலது பக்கப்பிரகாரத்தில்  அமைந்துள்ளது 
                                                         
  சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்,மாஹேஸ்வரி
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வருஷத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி   தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத    
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம் 
                                                         3 ஸ்ரீ சண்ட பைரவர் 
    மூன்றாவது  பைரவர் ஆலயத்தை வலம் வரும்போது  நவக்கிரகத்தின் பின்புறம்  அமைத்துள்ளார்கள் 
                                                          
செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே, மஹாவீராய தீமஹி, தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே, வஜ்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்
 என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்
                                                        4ஸ்ரீ குரோதான பைரவர் 
நான்காவது பைரவர்  நுழைவாயில் இடதுபுறத்தில் அமைந்துள்ளது 
                                               
சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி
ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே,  லட்சுமி தராய தீமஹி, தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம் 
                                                5ஸ்ரீ பீஷண பைரவர்
இந்த  5வது பைரவர் கோவிலுக்கு வெளியே மதில் சுவற்றுக்குள் வலது பக்கத்தில்  8 தூண்கள் மேல் அமைந்த திறந்த வெளி  மணடபத்தின் நடுவில் அமைந்துள்ளது .மேலும் இந்த 8 தூண்களும் 8பைரவர்களை குறிப்பதாகவும்  இங்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் 8 பைரவர்களை வ்ணங்கியதற்கு சமம்  

             கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே, ஸர்வானுக்ராய தீமஹி,  தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி, தந்நோ; காளி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்

                                                            6 ஸ்ரீ கபால பைரவர் 
                                                        

    இந்த 6வது பைரவர் கோபுரத்தில்  குடிகொண்டுள்ளார். இவரை நாம் நேரில் தரிசிக்க முடியாது





சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்
ஓம் கால தண்டாய வித்மஹே, வஜ்ர வீராய தீமஹி, தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்
ஒம் கஜத்வஜாய வித்மஹே, வஜ்ர ஹஸ்தாய தீமஹி,தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்

                                                      7 ஸ்ரீ உன்மந்த பைரவர் 



புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே,வராஹி மனோகராய தீமஹி, தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே, தண்ட ஹஸ்தாயை தீமஹி, தந்நோ: வராஹி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்     

                                                      8,ஸ்ரீ காலசம்ஹார பைரவர்  

                 
ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ
ஓம்மங்களேஷாயவித்மஹேசண்டிகாப்ரியாயதீமஹிதந்நோ, ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்


 

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே, மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை ஜெபித்து மனதார வழிபடலாம்     
 மேலும் இந்த ஆலயத்தில் மிக அற்புதமான்  சிற்ப்ப வேலைப் பாடுகள் கொண்ட சிலைகள் உள்ளன.
ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட  வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியன்  மயில்மேல் அமர்ந்த கோலம்  கண்கொள்லாகாட்சியாக உள்ளது 
                                                         மூலவர்  காமநாதீஸ்வரர் 


                                                             அம்மன் பெரியநாயகி



 இதில் கண்டவற்றில் மாறறம் தேவையாயின் சுட்டிக் காட்டி என்னை நன்றாக படைக்க சுட்டிக் காட்டவும் 
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய  நமஹா 
ஓம் ஸ்ரீ சுந்தர மகாலிங்கேஷ்வரா நமஹா 











 

சனி, 1 செப்டம்பர், 2012

சதுர்காலபைரவர்


      தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், கும்பகோணத்திற்கு கிழக்கே 6 km தொலைவில்திருவீசநல்லூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு சௌந்திர நாயகி உடனுறை சிவயோகி நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சதுர்காலபைரவர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு மக்களின் ஆயுட்காலம் 120 ஆண்டுகளாக இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்வை நான்காகப் பிரித்திருந்தனர். இதன் அடிப்படையில் இங்கு ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரு பைரவர் என்ற விதத்தில் நான்கு பைரவர்கள் இங்கே உள்ளனர். அவை முறையே, முதல் கட்டத்தில் முதல் 30 ஆண்டுகள் ஞானம் பெரும் நோக்கத்தில் ஞான பைரவரை வணங்க வேண்டும். அடுத்த இரண்டாம்கட்டத்தில் 31 முதல் 60 வயது வரை மகாலட்சுமி சன்னதியின் எதிரே திருவாட்சியுடன் காட்சி தரும்ஸ்வர்ணஆகர்ஷண பைரவரை மூன்றாம் கட்டத்தில் 61 முதல் 90 வயது வரை உள்ள காலத்திற்கு உன்மத்த பைரவரை வணங்கவேண்டும்.

            நான்காம் கட்டத்தில் 91 முதல் 120 வரை உள்ள காலத்திற்கு யோக பைரவரை வணங்க வேண்டும். இவ்வாறாக இத்திருக்கோயிலில் ஞானபைரவர், ஸ்வர்ணஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என நான்கு வடிவங்களில் பைரவர் அமைந்துள்ளது வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

        மனிதனின் ஆயுள் காலத்தைப் பிரித்து அவன் எப்படி வாழ வேண்டும் அந்தந்த வயதில் என்னென்ன செய்யவேண்டும் என்பன போன்ற விளக்கங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியதோடு மட்டும் அல்லாமல் வாழ்ந்தும் காட்டி,   திருக்கோயில்களை தன் வாழ்வின் ஒரு பகுதியாக அமைத்து வாழ்ந்தது தமிழனின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் செயல்.எனவே. அந்த நல்ல மனிதர்களை நினைத்தது வணங்க வேண்டும்.